ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (Autism
spectrum Disorder) என்பதை தமிழில் மதியிறுக்கம், மனயிறுக்கம், தன்முனைப்பு குறைபாடு, தற்சிந்தனையாளர்கள் என பல பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
ஓடிசம் பிள்ளைகளின் விகிதாசாரம் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. அண்மையில் பெறப்பட்ட ஆய்வுகளின் படி 63 பிள்ளைகள் பிறக்கும் போது அதில் ஒரு பிள்ளை ஓடிசம் குறைபாட்டுடன் பிறக்கிறது.இதற்குரிய தகுந்த காரணங்கள் உலகளாவிய ரீதியில் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.எனவே இவ்வகையான பிள்ளைகள் யாருக்கும் எந் நேரத்திலும் பிறக்கலாம்.எனவே எல்லோரும் ஓடிசம் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதுடன் இக் குறைபாடுடைய பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இயலுமான உதவிகளை செய்ய வேண்டும்.
இது நரம்பு மண்டலத்துடன் தொடர்புபட்ட ஒரு குறைபாடாகும். ஓடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவதற்கு எந்தவித பரிசோதனைகளும் பயனளிக்காது.அவ்வாறு ஏதாவது ஒரு பரிசோதனை செய்வோமாயின்
(MRI, Brine Scan, Hearing Test etc...)பரிசோதனையின் முடிவு சாதாரண பிள்ளைகளுக்கு கிடைக்கும் முடிவேயாகும்.
இப்பிள்ளைகள் தோற்றத்தில் சாதாரண பிள்ளைகளே.ஆனால் இவர்களின் நடத்தை அல்லது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும்.
சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும் சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.
ஓடிசம் உள்ள பிள்ளைகளின் சில குணாதிசயங்கள்...
• கண்ணோடு கண்பார்த்து கதைக்க மாட்டார்கள்.
• பெயர் சொல்லி அழைக்கும் போது அதை பொருட்படுத்த மாட்டார்கள்.
• மற்ற பிள்ளைகளுட
ன்
சேர்ந்து
பழகுவதிலும் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பர்.
• சிலர் அர்த்தம் இல்லாமல் பேசுவார்கள்.
• சிலர் கதைக்கவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஊமையல்ல.
• சிலவேளைகளில் தேவயற்று அழுவார்கள் அல்லது சிரிப்பார்கள்.
• கூடுதலாக தனிமையையே விரும்புவார்கள்
• அவர்களுக்கு பிடித்த விளையாட்டை மட்டும் திரும்பத்திரும்ப விளையாடுவார்கள்.
உதாரணமாக கைகளை அசைத்தல் உடலை முன்னும்பின்னுமாக அசைத்தல் துள்ளுதல் மேலும் பல அசைவுகள் காணப்படும்.ஆனால் ஏதாவது ஒரு உடல் அசைவுகளை எந்த நேரமும் மேற்கொள்வார்கள்.
• ஆரம்பத்தில் கதைக்கத் தொடங்கி திடீரென இரண்டு வயதை அடையும் போது பேச்சு இல்லாமல் போய்விடும்.
• முக்கியமாக இப்பிள்ளைகள் நேரம் இடம் யார் எவர் என்ற வித்தியாசம் உணரமாட்டார்கள்.
• கைகளை தட்டுதல் குதித்தல் போன்ற வித்தியாசமான விடயங்களை செய்து கொண்டிருப்பார்கள்
• தன்னை யாரும் தொடுவதையோ அணைப்பதையோ விரும்பமாட்டார்கள்.
• தினசரி செயற்பாடுகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அதனை அசௌகரிகமாக கருதுவர்.
ஆட்டிசத்தின் அறிகுறிகளை உணர்ந்து விரைவாக கண்டுபிடியுங்கள்..
தொடரும்..
No comments:
Post a Comment