Friday, November 10, 2017

100 Stories of OT Blog: My OT Blog: By Stephanie Yang

100 Stories of OT Blog: My OT Blog: By Stephanie Yang: I was devastated when my mom was diagnosed with breast cancer when I was in high school. I felt like the medical providers were cold and of...

100 Stories of OT Blog: My OT Story: By Monica Becerril

100 Stories of OT Blog: My OT Story: By Monica Becerril: I love being an occupational therapist because I can try instilling hope to people who have suffered an accident, illness or injury so that...

100 Stories of OT Blog: My OT Story: By Michal Atkins

100 Stories of OT Blog: My OT Story: By Michal Atkins: Eight days after giving birth to a healthy baby girl, a young mother had an injury that left her paralyzed from the neck down. She was admi...

100 Stories of OT Blog: My OT Story: By Darren’s story submitted by his OT...

100 Stories of OT Blog: My OT Story: By Darren’s story submitted by his OT...: I have been in occupational therapy on and off for the past six years. For some people, this might sound like a life sentence. After six st...

Saturday, November 4, 2017

ஆட்டிசம் – AUTISM


ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (Autism spectrum Disorder) என்பதை தமிழில் மதியிறுக்கம், மனயிறுக்கம், தன்முனைப்பு குறைபாடு, தற்சிந்தனையாளர்கள் என பல பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

ஓடிசம் பிள்ளைகளின் விகிதாசாரம் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. அண்மையில் பெறப்பட்ட ஆய்வுகளின் படி 63 பிள்ளைகள் பிறக்கும் போது அதில் ஒரு பிள்ளை ஓடிசம் குறைபாட்டுடன் பிறக்கிறது.இதற்குரிய தகுந்த காரணங்கள் உலகளாவிய ரீதியில் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.எனவே இவ்வகையான பிள்ளைகள் யாருக்கும் எந் நேரத்திலும் பிறக்கலாம்.எனவே எல்லோரும் ஓடிசம் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதுடன் இக் குறைபாடுடைய பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இயலுமான உதவிகளை செய்ய வேண்டும்.

இது நரம்பு மண்டலத்துடன் தொடர்புபட்ட ஒரு குறைபாடாகும். ஓடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவதற்கு எந்தவித பரிசோதனைகளும் பயனளிக்காது.அவ்வாறு ஏதாவது ஒரு பரிசோதனை செய்வோமாயின் (MRI, Brine Scan, Hearing Test etc...)பரிசோதனையின் முடிவு சாதாரண பிள்ளைகளுக்கு கிடைக்கும் முடிவேயாகும்.
இப்பிள்ளைகள் தோற்றத்தில் சாதாரண பிள்ளைகளே.ஆனால் இவர்களின் நடத்தை அல்லது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும்.

சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும் சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.

ஓடிசம் உள்ள பிள்ளைகளின் சில குணாதிசயங்கள்...
   கண்ணோடு கண்பார்த்து கதைக்க மாட்டார்கள்.
   பெயர் சொல்லி அழைக்கும் போது அதை பொருட்படுத்த மாட்டார்கள்.
   மற்ற பிள்ளைகளுட ன் சேர்ந்து பழகுவதிலும் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பர்.
   சிலர் அர்த்தம் இல்லாமல் பேசுவார்கள்.
   சிலர் கதைக்கவே மாட்டார்கள். ஆனால்  இவர்கள் ஊமையல்ல.
   சிலவேளைகளில் தேவயற்று அழுவார்கள் அல்லது சிரிப்பார்கள்.
   கூடுதலாக தனிமையையே விரும்புவார்கள்
   அவர்களுக்கு பிடித்த விளையாட்டை மட்டும் திரும்பத்திரும்ப விளையாடுவார்கள்.
உதாரணமாக கைகளை அசைத்தல் உடலை முன்னும்பின்னுமாக அசைத்தல் துள்ளுதல் மேலும் பல அசைவுகள் காணப்படும்.ஆனால் ஏதாவது ஒரு உடல் அசைவுகளை எந்த நேரமும் மேற்கொள்வார்கள்.
   ஆரம்பத்தில் கதைக்கத் தொடங்கி திடீரென இரண்டு வயதை அடையும் போது பேச்சு இல்லாமல் போய்விடும்.
   முக்கியமாக இப்பிள்ளைகள் நேரம் இடம் யார் எவர் என்ற வித்தியாசம் உணரமாட்டார்கள்.
   கைகளை தட்டுதல் குதித்தல் போன்ற வித்தியாசமான விடயங்களை செய்து கொண்டிருப்பார்கள்
   தன்னை யாரும் தொடுவதையோ அணைப்பதையோ விரும்பமாட்டார்கள்.
   தினசரி செயற்பாடுகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அதனை அசௌகரிகமாக கருதுவர்.

    ஆட்டிசத்தின் அறிகுறிகளை உணர்ந்து விரைவாக கண்டுபிடியுங்கள்..

     தொடரும்..




Thursday, October 26, 2017

உலக தொழில்சார்சிகிச்சையாளர் தினம் - ஒக்டோபர் 27 2017 WORLD OCCUPATIONAL THERAPISTS DAY

உலக தொழில்சார்சிகிச்சையாளர் தினம் - ஒக்டோபர் 27  2017
WORLD OCCUPATIONAL THERAPISTS DAY

உலக தொழில் சார் சிகிச்சையாளர் தினமானது 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி உலக தொழில் சார் சிகிச்சையாளர் கூட்டமைப்பினால் (World Federation of occupational therapists) பிரகடனப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள 92 நாடுகளில் இலங்கையும் உலக தொழில் சார் சிகிச்சையாளர் கூட்டமைப்பில் 1992 இலிருந்து அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனடிப்படையில் தொழில் சார் சிகிச்சையின் முக்கியத்துவத்தினை விபரிக்கும் நோக்கில் இவ்வாக்கம் வெளியிடப்படுகின்றது.



நாம் அன்றாடம் காலையில் எழும்பியதில் இருந்து இரவில் நித்திரைக்கு செல்லும் வரையில் பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபடுகின்றோம். தொழில் (Occupation) என்பது குறிப்பாக எமது வருமானத்தை ஈட்டுவதற்கான ஒரு வழிமுறையை மட்டும் உள்ளடக்குவதில்லை. நாம் செய்கின்ற அனைத்து விதமான அன்றாட வாழ்வின் செயற்பாடுகளான (Activities of Daily Livings) குளித்தல், காலைக்கடன்களை நிறைவேற்றல், சாப்பிடுதல், ஆடை அணிதல் போன்றவற்றுடன் பொழுது போக்கு (leisure) செயற்பாடுகளான விளையாட்டு, இசை, ஆடல், பாடல் போன்றவற்றுடன் எமது வேலையுடன் சம்பந்தமான (Productivity) கற்றல், கற்பித்தல், வாகனம் ஓட்டுதல், வியாபாரம் செய்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கும்.

ஒரு நபர் உடல் ரீதியாகவோ (Physically) உள ரீதியாகவோ (Mentally) பல்வேறுபட்ட நோய் நிலைமைகளுக்கு உள்ளாகி இயலாமை (Disable) நிலையினை அடையும் போது அவர் இன்னொரு நபரில் தங்கி வாழும் ஒரு அசௌகரிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நோக்கத்தினை கொண்ட பயனுள்ள செயற்பாடுகளை (Purposeful and useful activities) வழங்குவதன் மூலம் அவருடைய சுக நலத்தினை மேம்படுத்துகின்ற உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்கித்திய மருத்துவ சிகிச்சையின் ஒரு அணுகுமுறையே  தொழில்சார்சிகிச்சையாகும்.


மேலே குறிப்பிட்ட இயலாமை குறித்த நபரின் செயற்பாட்டில் எவ்வாறு பாதிப்பு செலுத்துகின்றது என்பதில் கவனம் செலுத்தி அதனை மதிப்பிட்டு அவர்களுக்கு பல்வேறு பட்ட சிகிச்சை உத்திகளின் மூலம் இன்னொருவரில் தங்கி வாழாத நிலைமைக்கு மாற்றுகின்ற சேவையை வழங்குகின்றவர்கள் தொழில் சார் சிகிச்சையாளர்கள் எனப்படுகின்றனர்.

தொழில் சார் சிகிச்சையின் பின்னர் ஒரு நபரால் தன்னம்பிக்கை சுய மதிப்பீடு என்பவற்றினை வளர்த்துக்கொள்வதுடன் ஒரு செயலினை சாதித்த உணர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
தன்னுடைய இயலாமை வாழ்வின் செயற்பாடுகளுக்கு தடையல்ல என்பதனை உணர்ந்து வாழ்வின் முக்கியத்துவத்தினையும் அர்த்தத்தினையும் விளங்கிக்கொள்ள முடியும்.
சமூகத்திலும் குடும்பத்திலும் அந்நபரின் பெறுமதியை உணர வைக்க முடியும். 

தொழில் சார் சிகிச்சையாளர்கள் பரந்த அளவிலான நோய் நிலைமைகளுக்கான சிகிச்சையினை வழங்குகின்றனர். குறிப்பாக உடல் உள ரீதியான நோய் நிலைமைகளுடன் சிறு பிள்ளைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் சிகிச்சை வழங்குகின்றனர்.

உடல் ரீதியான நிலைமைகள் (Physical conditions) யாவை? அவற்றிற்கு எவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?
மூட்டு வாதம்(Arthritis), பாரிசவாதம்(stroke-Paralysis) , பார்கின்சன் வியாதி ( Parkinson’s Disease) , முள்ளந்தண்டு தொடர்பான பிரச்சினைகள் (Spinal Cord Injuries) , கை சம்பந்தமான பிரச்சினைகள் (Hand Injuries), எரிகாயம்( Burns)போன்றவை.


இவற்றிக்காக பின்வரும் சிகிச்சை முறைகளில் தொழில்சார்சிகிச்சையாளர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அவையாவன ; ஸ்பிளின்டிங் (Splinting) , உடல் அசைவுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் (Body Movement Encouraging Activities), அறிவு மற்றும் சிந்தனையுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள் (Thinking and Cognitive Activities) புலன் ஒருங்கிணைவுச்சிகிச்சை ( Sensory Integration Therapy) , அன்றாட வாழ்வின் செயற்பாடுகளை பயிற்சி அளித்தல் (Activities of Daily Living Training) பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சூழலை மாற்றியமைத்தல் ( Environmental Modification) உதவி உபகரணங்களை வழங்கல் ( Adaptation and Assistive devices) சக்கரநாட்காலி வழங்குதல்,  உளநல மாற்ற செயற்பாடுகள் ( Psychological Adjustments)

மன ரீதியான நிலைமைகள் (Psychiatric Conditions) யாவை? அவற்றிற்கு எவ்வாறான சிகிச்சைகள்  வழங்கப்படுகின்றன ?
மனப்பதட்டம் (Anxiety) பேரச்சம் (Panic Disorder) அச்சக்கோளாறு (Phobia) மீண்டு வரும் நினைவுச்செயற்பாடுகள் (Obsessive Compulsive Disorder) மனஅழுத்தம் (Depression) மனச்சிதைவு (Schizophrenia) மனப்பித்து (Bipolar) டிமென்ஷியா (Dementia) போதைவஸ்துக்கு அடிமையாதல் போன்ற பல்வேறுபட்ட உள நோய்கள்.

இவற்றிக்காக பின்வரும் சிகிச்சை முறைகளில் தொழில்சார்சிகிச்சையாளர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
சமூக திறன்களை மேம்படுத்த பயிற்சியளித்தல் (Social Skills Training), தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளுக்கான பயிற்சி (Activities of Daily Living Training), குழுச்சிகிச்சை (Group therapy), கலை மற்றும் உணர்வு பூர்வமான சிகிச்சை (Art and Expressive Therapy), நோய் மீண்டும் மீண்டும் உருவாதனை தடுக்கும் பயிற்சிகள், மனதை சாந்தப்படுத்தும் பயிற்சி முறைகள் (Relaxation Therapy), சிந்தனை மற்றும் நடத்தை மாற்றங்களுக்கான சிகிச்சை (Cognitive Behavior therapy)

சிறு பிள்ளைகள் தொடர்பான பிரச்சினைகள் (Pediatric Conditions) யாவை? அவற்றிற்கு எவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?
பெருமூளை வாதம் (Cerebral Palsy) டவுன் சின்ரோம்( Down Syndrome) மனஇறுக்கம் ( Autism) தசையழிவு( Myopathy)எப்ஸ்  போல்சி ( Erb’s Palsy) போன்றவை.
இவற்றிக்காக பின்வரும் சிகிச்சை முறைகளில் தொழில்சார்சிகிச்சையாளர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

விளையாட்டுச்சிகிச்சை (Play Therapy), அன்றாட வாழ்வின் செயற்பாடுகளை பயிற்றுவித்தல் (Activities of Daily Living Training), விசேட கல்விச்செயற்பாடுகள் (Special Needs Education), புலன் உணர்வுகளின் ஒருங்கிணைவுச்செயற்பாடுகள் (Sensory Integration Therapy), நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தல் (Behavioral Modification)?
அரசாங்க, தனியார் மற்றும் இராணுவ வைத்தியசாலைகள், புனர்வாழ்வு அளிக்கும் நிலையங்கள், சமூகம், விசேட கல்விப்பாடசாலைகள், சிறுவர் விடுதிகள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களில் தொழில் சார் சிகிச்சையாளர்கள் தங்களுடைய சிகிச்சையை வழங்குகின்றனர்.
இலங்கையில் உள்ள தொழில் சார் சிகிச்சையாளர்கள் தங்களின் கல்விப்ப ட்டப்பிடிப்பினை கொழும்பு தேசிய வைத்திய சாலையிலுள்ள இயன் மருத்துவ மற்றும் தொழில்வழிச்சிகிச்சைக்கல்லூரியிலும் களனிப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


100 Stories of OT Blog: My OT Blog: By Stephanie Yang

100 Stories of OT Blog: My OT Blog: By Stephanie Yang : I was devastated when my mom was diagnosed with breast cancer when I was in high sch...